ETV Bharat / state

உதகையில் சுற்றித் திரிந்த கரடி: சிசிடிவி காட்சி வெளியீடு - உதகையில் சுற்றித் திரிந்த கரடியால் பரபரப்பு

உதகை நகரின் மையப் பகுதியில் சுற்றித் திரிந்த கரடியின் சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி
author img

By

Published : Jun 12, 2022, 3:25 PM IST

நீலகிரி: சமீப காலமாக காட்டெருமைகள், கரடிகள், சிறுத்தைகள் உதகை நகரில் சுற்றித் திரிவது அதிகரித்துள்ளது. வனப் பகுதியில் போதிய உணவு இல்லாததாலும், அவற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே, இதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த ஒரு கரடி உதகை நகரின் கமர்சியல் சாலை வழியாக மையப் பகுதியில் உள்ள அக்ரகாரம் பகுதிக்கு வந்தது. ஒவ்வொரு தெருவாக உணவு தேடி சென்ற அந்தக் கரடியை கண்ட நாய்கள் தலை தெரிக்க ஓடின. சத்தம் கேட்டு எழுந்த குடியிருப்பு வாசிகள் கரடியைப் பார்த்து அச்சமடைந்து சத்தமிட்டனர்.

சிசிடிவி காட்சி

அதனையடுத்து கரடி வனப்பகுதிக்கு சென்ற நிலையில், அது குறித்த சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இதனால் உதகையில் உள்ள பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்... பொதுமக்களின் கருத்தை கேட்கும் அறநிலையத்துறை.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.