நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பைத் தடுக்க சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு ஏற்கனவே முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகைக்காக உருவாக்கப்பட்ட ரெஜிஸ்ட்ரேஷன் பதிவுக்கான இணையதளம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீலகிரிக்கு வருபவர்கள் எந்த நோக்கத்திற்காக வருகிறார்களோ அதற்கான உரிய ஆவணத்தை சோதனை சாவடியில் காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தின் முக்கிய நுழைவுவாயிலான பர்லியார் சோதனைச் சாவடியில் ஆவணங்கள் பரிசோதனை செய்து நீலகிரிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்
அதே நேரத்தில் போலி ஆவணங்களை காட்டி உள்ளே வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.