நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தற்போது பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ளனர். இவர்களின் நீண்ட நாள்களாக பழங்குடியினர் பட்டியலில் தங்களின் சமூகத்தைச் சேர்க்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் பேசியதாவது, “படுகர் சமுதாய மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் முன்னேறிய நிலையில் உள்ளதால் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வாய்ப்பில்லை.
ஏற்கெனவே அமைக்கப்பட்ட கமிட்டி அதன் பரிந்துரைகளை மத்திய, மாநில அரசுக்கு அனுப்பிவிட்ட சூழலில் நம் படுகர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு வாய்ப்பில்லை” என்று உறுதிபட தெரிவித்தார்.
அமைச்சரின் இந்தப்பேச்சு ஒரு தரப்பினர் மத்தியில் வரவேற்பைப் பெற்றாலும் மற்றொரு சாரார் மத்தியில் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வரும் கல்வி ஆண்டிற்கான காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு