சர்வதேச சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. இந்த தினத்தில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கும், மாணவ மாணவிகளுக்கு உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றனர்.
இந்நிலையில், மாவட்டத்திலுள்ள சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து உதகையில் உள்ள சிஎஸ்ஐ பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.