நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும்பாலும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அதிகம் வாழ்கின்றனர். இவர்களின் குழந்தைகள் அதிகமாக அப்பகுதியில் உள்ள புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.
கரோனா பாதிப்பால் ஏழை மாணவர்களுக்கு உதவும் நோக்கில் பள்ளியின் தாளாளர் தாமஸ் செல்வம் ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருள்களான அரிசி, சர்க்கரை, காய்கறி, தேயிலை தூள் உள்ளிட்ட பொருள்களை 300 மாணவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் குன்னூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் குமார் முன்னிலையில் சமூக இடைவெளியில் நின்று குழந்தைகளின் பெற்றோர்கள் பொருள்களை வாங்கிச் சென்றனர். பள்ளி குழந்தைகளின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மருத்துவர்கள், செவிலியருக்கு பாராட்டு