ராணுவத்தில் பயன்படுத்திய பீரங்கி ஒன்பது நாள்களுக்கு முன் புனேவிலிருந்து நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சி மையத்துக்கு லாரியில் கொண்டு வரப்பட்டது. இந்த லாரி கர்நாடக மாநிலம் மைசூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக, கூடலுாரைக் கடந்து, குன்னுார் நோக்கி வந்தது. 40 டன் எடை கொண்ட இந்த பீரங்கியை ராட்சத லாரியில் கூடலூரில் இருந்து ஊட்டி வழியாக குன்னுருக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.
தொடர்ந்து இரண்டு நாள்களாக கூடலூர் சில்வர் கிளவுட் எஸ்டேட் பகுதியில் லாரியில் நிறுத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அதிகாலை கிரேன் மூலம் மாற்று லாரியில் ஏற்றப்பட்டு, கூடலுார்- நடுவட்டம் வரையிலான குறுகிய சாலையை, காவல்துறையினர் பாதுகாப்பு வாகனங்கள் முன்னே செல்ல கடந்து வந்தது. தொடர்ந்து இந்த பீரங்கி, மாலையில் மானெக்ஷா பிரிட்ஜ் வழியாக எம்.ஆர்.சி கொண்டு வரப்பட்டது. இதனை ஏராளமானோர் வழிநெடுக பார்வையிட்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
ராணுவ அலுவலர்கள் முன்னிலையில் மூன்று ராட்சத கிரேன்கள் மூலம் ராணுவ பகுதியில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட தளத்தில் வைக்கப்பட்டது. இந்த பீரங்கி 1960ஆம் ஆண்டு முதல் 1970ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் இடையே நடந்த யுத்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:
கடனை திருப்பி தர வலியுறுத்தி வீட்டுக்கு பூட்டு: காவல் கண்காணிப்பாளரிடம் பெண் புகார்