நீலகிரி மாவட்டம் சீகூர் வனசரகத்திற்கு உட்பட்ட ஆனைகட்டி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி சரசு (65) இன்று மாடுகளுக்கு புல் அறுக்கச் சென்றிருந்தார். அப்போது எதிர்பாராவிதமாக அங்கு வந்த யானை சரசுவைப் பலமாகத் தாக்கியது.
வலியில் துடித்துக் கொண்டிருந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த இடத்தில் மூதாட்டியுடன் இருந்த அவரது மகன் திருபாலன் (42), அவரது சகோதரி (55) ஆகியோர் காயங்களின்றி உயிர் தப்பினர்.
இது தொடர்பாக தகவலறிந்து வந்த தேனாடு கம்பை காவல் துறையினர் உயிரிழந்த மூதாட்டியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். வனத்துறை சார்பாக உடனடி நிவாரணமாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் அடுத்தடுத்து யானை தாக்கி உயிரிழப்பு ஏற்படுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தந்தை, மகனை கொன்ற யானையை பிடிக்கும் பணி தீவிரம்