நீலகிரி: கூடலூர் அருகே உள்ள மார்தோமா நகர், தோட்டம்முலா, சில்வர்கிளவுட் போன்ற பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானை அப்பகுதியிலுள்ள வேளாண் நிலத்தை நாசம் செய்தும் பொதுமக்களை அச்சுறுத்தியும் வந்தது.
இந்தக் காட்டு யானை கும்கி யானையின் உதவியுடன் பிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயத்தால் தவித்துவந்த காட்டு யானையை நேற்று (ஜூன் 17) முதுமலையில் உள்ள அபயாரண்யம் யானைகள் வளர்ப்பு முகாம் அருகில் (கரோல்) மரத்தினாலான கூண்டு அமைத்து சுமார் 9 கும்கி யானைகள் உடன் பத்திரமாக அடைக்கப்பட்டது.
அதனையடுத்து மருத்துவர் யானைக்கு உரிய சிகிச்சை அளித்துவருகின்றனர். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் பத்து மாதம் முதல் ஓராண்டு வரை இந்த யானையை குணப்படுத்த நாள்களாகும் எனத் தெரிவித்தனர்.
பலத்த காயத்துடன் பொதுமக்களை அச்சுறுத்திவந்த காட்டு யானையைப் பிடித்து தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டுவருவது வனவிலங்கு ஆர்வலர்கள், பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் விநியோகிக்கவிருக்கும் ஸ்டாலின்