ETV Bharat / state

ஸ்டாலின் ஆற்றிய அரும்பணியால் கரோனா குறைந்தது - ஆ.ராசா

தமிழ்நாட்டில் கரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது திமுக ஆட்சிக்கு வந்ததாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய அரும்பணியால் கரோனா தொற்று குறைந்தது என நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய அரும்பணியால் தமிழ்நாட்டில் கரோனா குறைந்தது - ஆ.ராசா

author img

By

Published : Feb 13, 2022, 8:22 AM IST

நீலகிரி: தமிழ்நாட்டில் பிப்.19 ஆம் தேதி நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலின் பரப்புரை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திமுக கூட்டணிக் சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, 'உள்ளாட்சியிலும் மலரட்டும் நம் ஆட்சி' என்று காணொலி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

மேலும், திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றார்.

திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் குன்னூர்

இதனிடையே, நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் குன்னூரில் நேற்று (பிப். 12) நடைபெற்றது. இதில் நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா கலந்துகொண்டு வேட்பாளர்களுக்கு வாக்குகளைச் சேகரித்தார். இதில் உலிக்கல், குன்னூர், ஜெகதளா உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய அரும்பணியால் தமிழ்நாட்டில் கரோனா குறைந்தது - ஆ.ராசா
முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய அரும்பணியால் தமிழ்நாட்டில் கரோனா குறைந்தது - ஆ.ராசா

அதன் பின் அவர் மேடையில் உரையாற்றுகையில், "தமிழ்நாட்டில் கரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது திமுக ஆட்சிக்கு வந்தது. முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய அரும்பணியால் கரோனா தொற்று குறைந்தது" என்றார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் குன்னூர்

இந்த நிகழ்ச்சியில் திமுக நீலகிரி மாவட்ட கழக செயலாளர் பா.மு. முபாரக், வனத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தற்போது நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் மேடையில் இருந்தவர்களும் கூட்டத்திற்கு வந்தவர்களும் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளி இல்லாமல் இருந்ததும் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: பாஜகவில் நடக்கும் அரசியல் பிடிக்கவில்லை - திமுகவில் இணைந்த கு.க. செல்வம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.