ETV Bharat / state

ஆளுநரை நெறிப்படுத்துகின்ற முதலமைச்சராக திகழ்கிறார் ஸ்டாலின் - ஆ.ராசா

ஆளுநரை நெறிப்படுத்துகின்ற முதலமைச்சராகவும், ஆளுநர் செய்ய வேண்டிய கடமைகளை உணர்த்துகின்ற முதலமைச்சராகவும் ஸ்டாலின் திகழ்கிறார் என நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

ஆளுநரை நெறி படுத்துகின்ற முதலமைச்சராக திகழ்கிறார் ஸ்டாலின் - ஆ.ராசா பேச்சு

author img

By

Published : May 22, 2022, 7:20 AM IST

நீலகிரி: உதகை 200 ஆவது ஆண்டு தொடக்க விழாவில் நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "உதகை 200 ஆவது ஆண்டு தொடக்க விழாவை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தவுடன் 10 கோடி ரூபாய் நிதியை முதலமைச்சர் ஸ்டாலின் ஒதுக்கினார். எல்லை கடந்த மனித நேயமிக்கவர் ஜான் சல்லிவன்.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதிய கால்டுவெல் ஒரு கட்டுரையில், நீலகிரியில் வசிக்கும் பழங்குடியினர்கள் தொல் திராவிடர்கள் என தெரிவித்துள்ளார். திராவிட மாடல் முதலமைச்சர், திராவிடர்களின் மூத்தவர்களான தொல் திராவிடர்களின் விழாவை தொடங்கி வைப்பது பெருமைக்குரிய விடயம்.

பிரிட்டிஷாருக்கு எதிராக செயல்பட்ட பிரிட்டிஷார் என்ற புத்தகத்தில் ஜான் சல்லிவன் பெயரும் இருக்கின்றது. 1921 ஆம் ஆண்டு உதகை 100 ஆவது ஆண்டு விழாவில் இந்திய வைஸ்ராயாக இருந்த வெலிங்டன் , ஜான் சல்லிவனை பாராட்டுகின்றேன் வணங்குகின்றேன் எனத் தெரிவித்தார்.

மேலும் எனக்கு பின் 200 ஆவது ஆண்டு விழா நடைபெறும். அந்த விழாவில் ஒரு ஆளுநர் பங்கேற்பார் எனவும் அப்போது நானும், என் மனைவியும் விண்ணுலகில் இருந்து வாழ்த்துவோம் என்றும் வெலிங்டன் தெரிவித்தார். ஆனால் இப்போது ஆளுநர் இல்லை.

ஆளுநர் ஆண்ட காலம் அது, ஆனால் இன்றைக்கு ஆளுநரை நெறி படுத்துகின்ற முதலமைச்சர் நமது முதலமைச்சர். ஆளுநர் செய்யவேண்டிய கடமை எல்லாம் உணர்த்துகின்ற முதலமைச்சராக திகழ்கிறார். விண்ணுலகில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட 200 ஆவது ஆண்டு விழாவில் வெலிங்டன் மற்றும் அவரது மனைவியின் வாழ்த்துக்கள் அவர்கள் விரும்பியபடி, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கிடைக்கும் என தெரிவித்தார்.

தீராத பிரச்சனையாக பிரிவு 17, டேன் டீ நஷ்டத்தில் இயங்குவது, 10 ஆயிரம் பேருக்கு மின்சாரம் இல்லாதது குறித்தும், அதை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கையை வனத்துறை அமைச்சரும், நானும் சொன்னோம். அப்போது, நானே தலைமை தாங்கி அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று முதலமைச்சர் கூறினார்.

வாக்கு வங்கி அரசியலை கடந்து ஆட்சி நடத்துவது என்ற முறையை ஸ்டாலின் கையாள்கிறார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோரிக்கைகளை முதலமைச்சர் நிறைவேற்றுவார்" என்றார்.

இதையும் படிங்க: 'அப்படிப்போடு' - பழங்குடியின மக்களுடன் பாரம்பரிய நடனமாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.