ETV Bharat / state

உயிரிழந்த யானைக்குட்டியும் அதன் அருகில் யாரையும் அனுமதிக்காத தாயின் பாசப்போராட்டமும்..!

முதுமலை புலிகள் காப்பகத்தில், புலி தாக்கி உயிரிழந்த 6 மாத யானையின் அருகில் வனத்துறையினரை நீண்ட நேரம் அனுமதிக்காமல், துரத்திய தாய் யானையின் பாசப் போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய் யானையின் பாசப்போராட்டம்
தாய் யானையின் பாசப்போராட்டம்
author img

By

Published : Aug 12, 2021, 7:06 PM IST

Updated : Aug 12, 2021, 10:54 PM IST

நீலகிரி: மேற்குத்தொடர்ச்சி மலையில், சுமார் 688 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட முதுமலைப் புலிகள் காப்பகத்தில் நேற்று (ஆகஸ்ட் 11) 2 யானைகள் உயிரிழந்தன. தெங்குமரஹாடா வனப்பகுதியில் ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி உயிரிழந்த 4 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்றும், தெப்பக்காடு வனப்பகுதியில் பிறந்து 6 மாதமே ஆகி, புலியால் தாக்கப்பட்டு உயிரிழந்த யானை ஒன்றும் கண்டறியப்பட்டது.

ஆனால், தொடர்ந்து இறந்த யானையின் உடலை, புலியை சாப்பிடவிடாமல் தாய் யானை உள்பட 3 யானைகள் பாதுகாத்து நின்றதால், புலி அங்கிருந்து சென்றுள்ளது.
உயிரிழந்த யானையை விட்டுப் பிரிய மனமில்லாமல் அங்கேயே கூடிய யானைக்கூட்டம்
தகவல் அறிந்து அங்கு சென்ற வனத்துறையினர் 6 மாதமே ஆன யானையின் உடலை மீட்டுப்பிரேத பரிசோதனை செய்ய முயன்றனர். ஆனால், இறந்த யானையின் உடலின் அருகிலேயே நின்று கொண்டிருந்த தாய் யானை உள்ளிட்ட 3 யானைகளும் வனத்துறையினரை, உயிரிழந்த குட்டியின் அருகே நெருங்கவிடாமல் தொடர்ந்து ஆக்ரோசத்துடன் துரத்தின.

தாய் யானையின் பாசப்போராட்டம்
அதனையடுத்து நீண்ட நேரத்திற்குப் பிறகு, தாய் யானை உள்பட 3 யானைகளும் வனப்பகுதிக்குள் சென்றன. பின்னர் இறந்த யானையின் உடலை வனத்துறையினர் பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இறந்த யானையின் உடலின் அருகே தாய் யானை நீண்ட நேரமாக, நின்றவாறு பாசப் போராட்டத்தில் ஈடுபட்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ’புதிய பேருந்துகளை இயக்க ஜெர்மனியுடன் பேச்சுவார்த்தை’ - அமைச்சர் ராஜகண்ணப்பன்

Last Updated : Aug 12, 2021, 10:54 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.