நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையைச் சேர்ந்த கல்லூரி மாணவன் தனது குடும்பத்தினருடன் மரப்பாலம் அருவிக்குச் சென்றுள்ளார்.
அப்போது ஆற்றிற்குள் சென்று செல்ஃபி எடுக்க முயற்சித்தபோது, தவறி விழுந்து சுழலில் சிக்கினார். தகவலறிந்து விரைந்த தீயணைப்புத் துறையினர் இரண்டாம் நாளாக இன்றும் மாணவனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக மேட்டுப்பாளையத்திலிருந்து பரிசல்கள் கொண்டுவந்து 26 மணி நேரத்திற்குப் பிறகு மாணவனின் சடலத்தை மீட்டனர்.
பின்னர், சடலத்தை குன்னூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்துள்ளனர். இது குறித்து வெலிங்டன் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் பார்க்க:செல்ஃபி எடுக்க முயன்று சுழலில் சிக்கிய கல்லூரி மாணவன்!