ETV Bharat / state

காட்டெருமையின் தலையிலிருந்து அகற்றப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள்.. குன்னூர் பகீர் சம்பவம்.. வனத்துறை விசாரணை! - bison shot dead at Coonoor

bison shot in the head at Nilgiris district: குன்னூர் அருகே உள்ள சாலையில் காயங்களுடன் இறந்து கிடந்த காட்டெருமையின் தலையில் நாட்டு துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

கட்டெருமையின் தலையிலிருந்து அகற்றப்பட்ட நாட்டு துப்பாக்கி தோட்டாக்கள்: வனத்துறை ஆய்வு..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 8:52 PM IST

Updated : Oct 19, 2023, 9:13 PM IST

நீலகிரி: பொழுதுபோக்குக்காகவும், இறைச்சிக்காகவும் காட்டில் வாழும் வன விலங்குகளை வேட்டையாடும் பழக்கம் தமிழகத்திலிருந்து வருகிறது. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்குப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், இன்னும் இந்த வேட்டை சம்பவங்கள் நடந்தவண்ணமே உள்ளன.

அந்த வகையில் இன்று குன்னூர் அருகே உள்ள சேலாஸ் பாலடா செல்லும் சாலையில் இறந்த கிடந்த காட்டு எருமையைச் சந்தேகத்தின் பேரில் ஆய்வு செய்து பார்த்தபோது அதன் தலையிலிருந்து நாட்டுத் துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வனப்பகுதி கொண்ட மாவட்டமாகும் . இங்கு குன்னூர் அருகே உள்ள சேலாஸ் பாலடா செல்லும் சாலையில் 4 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டெருமை தலையில் காயத்துடன் இறந்து கிடப்பதாகக் குந்தா வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் குந்தா வனச்சரகர் சீனிவாசன், வனவர் மணிகண்டன், கொலக்கம்பை சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த காட்டெருமையைப் பார்வையிட்டனர்.

இதையும் படிங்க: ஈரோடு அருகே 50 கிலோ கஞ்சா பறிமுதல் - அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் நடவடிக்கை!

பின்பு கால்நடை மருத்துவர் பாலமுருகன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு காட்டெருமையை உடற் கூறு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது நாட்டுத் துப்பாக்கியில் பயன்படுத்தும் தோட்டா மற்றும் பிளாஸ்டிக்கிளான பொருள் காட்டு எருமையின் தலையிலிருந்து அகற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இறந்த காட்டெருமையின் உடல் உறுப்புகளை ஆய்வுக்காகத் தடய அறிவியல் துறை ஆய்வகத்திற்கு அனுப்பி அந்த ஆய்வுக்குப் பின் விபரம் தெரிவிக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். யாரேனும் இறைச்சிக்காகக் காட்டெருமையை வேட்டையாடினார்களா என்ற கோணத்தில் குந்தா வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த காட்டெருமையின் உடலை மாவட்ட வன அலுவலர் கௌதம் மற்றும் உதவி வன பாதுகாவலர் தேவராஜ் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.

இதையும் படிங்க: அதிக வட்டி தருவதாக கூறி ரூ.9 கோடி மோசடி; பணத்தை திருப்பி கேட்டதால் கொலை மிரட்டல்!

Last Updated : Oct 19, 2023, 9:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.