நீலகிரி: தனியார் தேயிலை ஏலம் நடைபெற்றது, இதில் மொத்தம் 17 லட்சம் கிலோ தேயிலைகள் விற்பனைக்கு வந்தன. எகிப்து, ஈரான், ரஷ்யா போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்கள் பங்களிப்பு அதிகம் இருந்ததாலும் உள்நாட்டு தேவை அதிகரிப்பாலும் 90 சதவீத தேயிலைகள் விற்பனை ஆகின.
குறைந்தபட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு 90 ரூபாயும் அதிக பட்சமாக 220 ரூபாய்க்கும் விலை போயின. கடந்த சில வாரங்களாக 60 சதவீதம் முதல் 70 சதவீதம் மட்டுமே விற்கப்பட்டு வந்த தேயிலை இந்த வாரம் 90 சதவீதம் வரை விற்பனை ஆகியுள்ளது விவசாயிகள், வர்தகர்கள் மற்றும் ஏலதாரர்கள் மத்தியில் ஆறுதலை அளித்துள்ளது.
இதையும் படிங்க: கூண்டில் சிக்கிய கரடி.. பொதுமக்கள் நிம்மதி