ETV Bharat / state

இடி தாக்கி 8 பேர் காயம்: சாலை வசதியில்லாததால் மக்கள் தவிப்பு!

நீலகிரி: குன்னூர் பகுதியில் இடி தாக்கி 8 பேர் காயமடைந்த நிலையில், சாலை வசதியில்லாததால் சுமார் 18  மணி நேரத்திற்கு பிறகு அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இடி இடித்து 8 பேர் காயம்: சாலை வசதியில்லாததால் மக்கள் தவிப்பு!
author img

By

Published : Apr 20, 2019, 7:55 PM IST

நீலகிரி மாவட்டம், குன்னூரில் இருந்து சுமார் 50 கி.மீ., தொலைவில் சின்னாலக்கோம்பை, யானைபள்ளம், சடையன்கொம்பை, மேல்குரங்கு மேடு கிராமங்கள் உள்ளன. இங்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கடந்த 52 ஆண்டுகளாக இப்பகுதிக்கு சாலை வசதி செய்து தராததால் இங்குள்ள நோயாளிகளை தொட்டில் கட்டி தூக்கிச் செல்லும் அவல நிலை உள்ளது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு பெய்த மழையின்போது இடிதாக்கி ஆறு பெண்கள் உட்பட எட்டு பேர் காயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த ஆம்புலன்ஸ் சாலை வசதி இல்லாததால் சிக்கிக் கொண்டது. இதனையடுத்து சுமார் 18 மணி நேரம் போராடியவர்களை, காவல் துறையினர் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சமீபத்தில் இந்தப் பகுதியில் தார்ச்சாலை அமைப்பதாக 1.25 கோடி ரூபாய் மதிப்பில் நிதி ஒதுக்கி தோண்டப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

Intro:

குன்னூர் பகுதியில், இடி இடித்து 8 பேர் காயமடைந்தனர். சாலை வசதியில்லாததால் 17.30  மணி நேரத்திற்கு பிறகு மீட்பு
––––
நீலகிரி மாவட்டம், குன்னூரில் இருந்து சுமார் 50 கி.மீ., தொலைவில் உள்ளது சின்னாலக்கோம்பை, யானைபள்ளம், சடையன்கொம்பை, மேல்குரங்கு மேடு. இப்பகுதிகளில் 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கடந்த 52 ஆண்டுகளாக இப்பகுதிக்கு சாலை வசதி செய்து தராததால் இங்குள்ள நோயாளிகளை தொட்டில் கட்டி தூக்கி வரும் அவல நிலை ஏற்பட்டது. சமீபத்தில் இந்த பகுதியில் தார் சாலை அமைப்பதாக 1.25 கோடி ரூபாய் மதிப்பில் நிதி ஒதுக்கி தோண்டப்பட்டு கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், நள்ளிரவு பெய்த மழையில் இடிதாக்கி, 6 பெண்கள் உட்பட 8 பேர் காயமடைந்தனர். இதில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு சென்ற ஆம்புலென்ஸ்  சாலை வசதி இல்லாததால் சிக்கிக் கொண்டது. எஸ்.பி., சண்முகப்பிரியா தலைமையில் 52 பேர் கொண்ட குழுவினர் மீட்க அனுப்பப்பட்டது. இந்நிலையில், மற்றொரு ஆம்புலென்ஸ் கொண்டுவரப்பட்டு, டி.எஸ்.பி., கிருஷ்ணமூர்த்தி உட்பட போலீசார், வனத்துறையினர், பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சாலையை சீரமைக்க கோரி ஆதிவாசி மக்கள் வலியுறுத்தியுறுத்தியுள்ளனர். 17.30 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீதா, ஆதிவாசி, சின்னாலக்கோம்பை, குன்னூர்

Body:

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.