நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக மழை தீவிரமடைந்துள்ளது. உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் இடைவிடாமல் கனமழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
மழை நீரானது தாழ்வான பகுதிகளில் ஆறு போல ஒடுகிறது. இந்நிலையில் அதிக மழை பெய்து வரும் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய நான்கு தாலுக்காகளில் உள்ள பள்ளி,கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா மூன்றாவது நாளாக விடுமுறையை அறிவித்தார்.
மேலும் இரவு நேரங்களில் சாயும் மரங்களை தீயணைப்பு வீரர்கள் அவ்வப்போது உடனடியாக அப்புறப்படுத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்டசமாக அவலாஞ்சி நீர்பிடிப்பு பகுதியில் 40 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் மழை அறிக்கை 07.08.2019 இன்று (காலை வரை)
உதகை : 50 மி.மீ.
நடுவட்டம் : 119 மி.மீ.
கல்லட்டி : 18 மி.மீ.
க்ளென்மோர்கன் :101 மி.மீ.
குந்தா : 46 மி.மீ.
அவலாஞ்சி : 405 மி.மீ.
எமரால்டு : 103 மி.மீ.
கெத்தை : 10 மி.மீ.
கின்னகொரை : 12 மி.மீ.
அப்பர்பவானி : 220 மி.மீ.
குன்னூர் : 17 மி.மீ.
பர்லியர் : 15 மி.மீ.
கேத்தி : 11 மி.மீ.
கோத்தகிரி : 30 மி.மீ.
கோடநாடு : 14 மி.மீ.
கூடலூர் : 97 மி.மீ.
தேவலா : 106 மி.மீ.
மொத்தம் : 1374 மி.மீ.
சராசரி : 80.82 மி.மீ.