நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தை நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக பகல் நேரங்களிலேயே தேயிலை தோட்டங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் சர்வசாதாரணமாக உலா வருகிறது.
இந்நிலையில், குன்னுார் மல்லிக்கொரை கிராமத்தின் அருகேவுள்ள தேயிலை தோட்டத்தில், வன விலங்குகளின் உருமல் சத்தம் கேட்டுள்ளது. உடனே அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத் துறையினர் ஆய்வு செய்தபோது, 2 வயதுடைய பெண் சிறுத்தை இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, அங்குவந்த கால்நடை மருத்துவர்கள், உயிரிழந்த சிறுத்தையை உடற்கூராய்வு செய்தனர். ஆய்வில், இரு சிறுத்தைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பெண் சிறுத்தை உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் சிறுத்தையின் பற்கள் பறிமுதல்