நீலகிரி மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழை காரணமாக கன மழை பெய்து வருகிறது. இதனால் குன்னூர் - கோத்தகிரி சாலையில் நடுஹட்டி அருகே 3 மரங்கள் சாலையின் குறுக்கே சாய்ந்து விழுந்ததால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
இத்தகவலின்பேரில் அப்பகுதிக்கு வந்த குன்னூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் மோகன் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், சாலையில் விழுந்திருந்த மரங்களை வெட்டி அகற்றினர் . இதனால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை சரி செய்யும் பணி நடைபெற்றதால் நேற்று (நவ.18) ஒரு நாள் முழுவதும் குன்னூரைச் சுற்றியுள்ள எடப்பள்ளி, வெலிங்டன் உட்பட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது.
இதையும் படிங்க: பேருந்துக்குள் மழை, குடை பிடித்தபடி பேருந்தை ஓட்டிய டிரைவர்!