ETV Bharat / state

ரூ.10 கோடியில் ஊட்டி படகு இல்ல ஏரி தூர்வாரப்படும்: அதிகாரிகள் தகவல்! - 10 crore for cleaning Ooty Boat House Lake

Ooty Boat House: உதகை படகு இல்ல ஏரியை ரூ.10 கோடி செலவில் தூர்வார திட்டமிடப்பட்டு உள்ளதாக பொதுப்பணித்துறை நீர்வள ஆதார உதவி செயற்பொறியாளர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

ரூ 10 கோடியில் ஊட்டி படகு இல்ல ஏரி தூர்வாரப்படும்: அதிகாரிகள் தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2023, 9:45 PM IST

நீலகிரி: உதகையில் முக்கிய சுற்றுலாத் தலமாக உதகை படகு இல்லம் திகழ்கிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் உதகை ஏரியில் படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏரி 1823-ல் இருந்து செயற்கையாக இருந்து வருகிறது. ஆரம்பக் காலத்தில் சேரிங்கிராஸ் முதல் காந்தல் முக்கோணம் வரை ஏரியின் பரப்பளவு இருந்தது. அப்போது ஏரியின் தண்ணீர் குடிநீராகப் பயன்படுத்தப்பட்டது.

பின்னர் காலப்போக்கில் உதகை நகரில் கட்டப்படும் கட்டடங்கள் எண்ணிக்கை அதிகரித்ததால், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், வீடுகள், தங்கும் விடுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் கோடப்பமந்து கால்வாய் வழியாக உதகை ஏரியில் கலக்கிறது. விவசாய நிலங்களிலிருந்து அடித்து வந்த மண்ணும் படிந்ததால் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு ஒரு முறை மாவட்ட நிர்வாகம் மூலம் ஏரி தூர்வாரப்பட்டு வந்தது.

இந்நிலையில், அப்போது கரை பகுதி மட்டுமே தூர்வாரப்பட்டது. மேலும் கடந்த 2018-ம் ஆண்டு ஏரியைத் தூர்வாரும் பணி நடந்தது. இதில் கோடப்பமந்து கால்வாய் உதகையில் ஏரியில் கலக்கும் முகத்துவாரத்தில் 2 அடி ஆழத்திற்குப் படிந்திருந்த மண் மட்டுமே அகற்றப்பட்டது. படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகளுக்காக 33 மோட்டார் படகுகள், 17 துடுப்பு படகுகள், 105 மிதி படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: 6 கட்டிவிட்டு 45 தடுப்பணைகளுக்கு கணக்கு.. ரூ.30 லட்சம் சுருட்டிய அதிகாரிகள்.. பெரம்பலூரில் நடந்தது என்ன?

ஏரியின் மறு கரையில் உள்ள தேனிலவு படகு இல்லத்திலும், சிறுவர் பூங்கா உட்பட வசதிகள் உள்ளன. கடந்த ஆண்டு உதகை படகு இல்லத்துக்கு 16 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர். இத்தகைய சிறப்பு மிக்க இந்த ஏரி ரூ.10 கோடி மதிப்பில் தூர்வாரப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பொதுப் பணித் துறை நீர்வள ஆதார உதவி செயற்பொறியாளர் சதீஷ்குமார் கூறும் போது, "உதகை படகு இல்ல ஏரி, கோடப்பமந்து கால்வாய் முழுவதுமாக தூர்வாரப்பட உள்ளது. கோடப்பமந்து கால்வாயில் 3½ கிலோ மீட்டர் தூரம் மணல் மற்றும் செடிகள் அகற்றப்படுகிறது. இதேபோல் 10 லட்சம் மீட்டர் கியூபிக் கொள்ளளவு கொண்ட உதகை ஏரியில் 2.98 லட்சம் மீட்டர் கியூபிக் அளவுக்குச் சகதி எடுக்கப்படுகிறது.

மேலும், கோடப்பமந்து கால்வாயில் இருந்து ஏரியில் இணையும் இடத்தில் சேரும் கழிவுகள் தானியங்கி முறையில் அகற்ற எந்திரங்கள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட நிர்வாக நிதியாக ரூ.10 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது. நிர்வாக அனுமதி விரைவில் கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும்" என சதீஷ் குமார் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "இங்கிலாந்தில் பணியாற்ற 500 செவிலியர்களுக்கு வாய்ப்பு" - அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.