ஊரடங்கால் நீலகிரி மாவட்டத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் நேர கட்டுப்பாடுகளுடன் திறக்கபட்டுவந்தன. தற்போது, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கபட்டுள்ளதையடுத்து, உதகையில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பேக்கரிகள் திறக்கப்பட்டன.
இதனிடையே, பெரும்பாலான பேக்கரிகளில் காலாவதியான உணவு பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவையடுத்து, உதகையில் உள்ள பேக்கரிகளில் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, காலாவதியான பண், வர்க்கி, முருக்கு, கேக் உள்பட பல்வேறு உணவு பொருள்கள் கண்டுபிடிக்கபட்டு, பறிமுதல் செய்யபட்டன. இந்த சோதனையில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான உணவு பொருட்கள் அழிக்கபட்டுள்ளன.
இதையும் படிங்க: நிலத்தகராறில் கணவன், மனைவி வெட்டிக் கொலை...!