ETV Bharat / state

ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை - நெஞ்சை உலுக்கும் காட்சிகள்! - கும்பகோணம்

கும்பகோணம் தாராசுரம் ரயில்வே கேட் அருகே, திருச்சியிலிருந்து கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை வரை செல்லும் பயணிகள் ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை
ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை
author img

By

Published : Jun 21, 2022, 6:31 PM IST

Updated : Jun 21, 2022, 7:00 PM IST

தஞ்சாவூர்: கும்பகோணம் தாராசுரம் ரயில்வே கேட் அருகே இன்று (ஜூன் 21) காலை திருச்சியில் இருந்து கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை வரை செல்லும் பயணிகள் ரயிலில், திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகா, அரித்துவாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமரன்(24) என்பவர் தான் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்தி வைத்து விட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில், ரயில் வந்து கொண்டிருக்கும் போது, ரயில்வே டிராக்கில் நின்று தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை தீர்வல்ல; தற்கொலையை கைவிடுக
தற்கொலை தீர்வல்ல; தற்கொலையை கைவிடுக

எதிர்பாராவிதமாக இக்காட்சியை ஒருவர் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். இது நெஞ்சை பதை பதைக்க செய்கிறது.

இச்சம்பவம் குறித்து, கும்பகோணம் இருப்புப்பாதை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துக்குமரனின் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்விற்காக கும்பகோணம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இக்காட்சியை பதிவு செய்தவரிடமும், அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை தீர்வல்ல; தற்கொலையை கைவிடுக

கும்பகோணம் பகுதியில் நேற்று(ஜூன்.20) மாத்திகேட் பகுதியில் ஐடி துறையில் பணியாற்றும் கோபிநாத் (28) என்ற இளைஞர் ரயிலில் சிக்கி மரித்த நிலையில், தொடர்ந்து இன்றும் ஒரு இளைஞர் உயிரிழந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் அதிர்ச்சியினையும், சோகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுக்கு பயந்து மாணவி தற்கொலை: 70% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற சோகம்

Last Updated : Jun 21, 2022, 7:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.