ETV Bharat / state

தஞ்சாவூரில் முகம் எரிக்கப்பட்ட நிலையில் இளைஞர் கொலை - Youth dead in Thanjavur

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை பகுதியில் இளைஞர் ஒருவர் முகம் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

Thanjavur murder
Youth shot dead in Thanjavur
author img

By

Published : Mar 16, 2020, 1:27 PM IST

Updated : Mar 16, 2020, 2:44 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை லட்சத் தோப்பு, வடக்கு அம்மன் நகரில் அடர்ந்த காட்டுப்பகுதி உள்ளது. இந்தக் காட்டுப்பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் முகம் எரிக்கப்பட்ட நிலையில் கொலைசெய்யப்பட்டு கிடந்தார்.

இப்பகுதியில் உள்ள சிலர் இன்று காலை அந்தப் பகுதி வழியாகச் சென்றபோது இதைக் கண்டு கிராம நிர்வாக அலுவலர் சரவணகுமாரிடம் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் பெரியசாமி, காவல் உதவி ஆய்வாளர் தென்னரசு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து விசாரணை நடத்தினர்.

தஞ்சாவூரில் முகம் எரிக்கப்பட்ட நிலையில் இளைஞர் கொலை

இதில் கொலைசெய்யப்பட்ட நபர் யார், எதற்காக யாரால் கொலைசெய்யப்பட்டார் என்ற விவரம் ஏதும் தெரியவில்லை. இதையடுத்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: மது போதையில் காவலரை தாக்கிய மூன்று பேர் கைது

Last Updated : Mar 16, 2020, 2:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.