தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் முதலியார் தெருவை சேர்ந்த எம்.எஸ்ஸி., எம்.பில் முதுநிலை பட்டதாரியான மணிகண்டன் (33), கல்லூரி பேராசிரியர் பணிக்காக முயற்சி செய்து வந்தார். இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மாநில அரசின் தகுதி தேர்விற்கு கடந்த மாதம் (ஜூலை) தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
இதில் ஐந்து மதிப்பெண் குறைவாக பெற்று அவர் தோல்வி அடைந்ததாகவும், நல்ல பணி அமையாததால், திருமணமும் கைகூடுவதில் சிக்கல் நீடித்து வந்தாலும்,கடும் மன உளைச்சலிலும் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்றிரவு (ஆகஸ்ட் 16) அவரது குடும்பத்தினர் வீட்டின் கீழே இருந்த போது, மணிகண்டன் மாடியில் உள்ள அறைக்கு சென்று, , தற்கொலை செய்து கொண்டார். வீட்டின் மாடியில் இருந்து புகை வருவது கண்டும், மணிகண்டனின் அலறல் சத்தம் கேட்டும், அவரது குடும்பத்தினரும், அக்கம் பக்கத்து வீட்டினரும் திடுக்கிட்டு மாடிக்கு சென்று பார்த்த போது மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற திருவிடைமருதூர் காவல்துறையினர், மணிகண்டன் உடலை கைப்பற்றி, உடர்கூறாய்விற்காக, திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த மணிகண்டன் கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஓராண்டு காலம் ஆசிரியராக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு பள்ளி மாணாக்கர்கள் தற்கொலை முயற்சி