தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள அதிராம்பட்டினம் அபய வரதீஸ்வரர் சாமி திருக்கோயிலில், திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்வதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வருவது வழக்கம்.
இந்த கோயிலில் நேற்று உலக அமைதிக்காகவும் நலனுக்காகவும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.