தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அம்மன்குடியைச் சேர்ந்தவர் நளினி வயது( 52 ). இருவரும் இவரது மகன் சுதாகரும் அம்மன் குடியிலிருந்து இருசக்கர வாகனத்தில் மருத்துவம் பார்ப்பதற்காக நாச்சியார்கோவிலிலிருந்து பூந்தோட்டம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது புதுக்குடி என்ற கிராமத்தின் அருகே அவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தை பின் தொடர்ந்து வந்த டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், நளினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த சுதாகர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து குடவாசல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சத்தீஸ்கரில் பேருந்து விபத்து; நான்கு பேர் உயிரிழப்பு