தஞ்சாவூர்: கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரியில் மூவாயிரம் மாணவியர்கள் இளநிலை மற்றும் முதுகலை உயர்கல்வி பயின்று வருகின்றனர். இங்கு, செப்டம்பர் 06, தேசிய புத்தக வாசிப்பு தினத்தை கொண்டாடும் வகையிலும், செப்டம்பர் 08, சர்வதேச எழுத்தறிவு தினத்தை போற்றிடும் வகையிலும், புத்தக வாசிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வு கல்லூரி தாளாளர் அமலோற்பவ மேரி மற்றும் கல்லூரி முதல்வர் யூஜின் அமலா ஆகியோர் தலைமையிலும், பல்வேறு உலக சாதனை நிகழ்த்திய யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக்ஸ் ஆப் ரெக்கார்ட் மற்றும் பியூசர் கலாம்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவன தலைவர் பாலகிருஷ்ணன் பாபு, மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர் ரமேஷ் முன்னிலையிலும் நடைபெற்றது.
முதன்மை சிறப்பு விருந்திநராக, மேனாள் கல்லூரி கல்வி தஞ்சை மண்டல இணை இயக்குநரும், முன்னாள் அரசு மகளிர் கல்லூரி முதல்வருமான ஜான் மெரினா, சிறப்பு விருந்திநராக மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ. இராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர். விருந்தநராக கும்பகோணம் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், ஆகியோர் பங்கேற்றனர்.
கல்லூரி மைதானத்தில், மூவாயிரம் மாணவியர்களும் ஒன்று திரண்டு ஒருங்கிணைந்து, உலகின் மிகப்பெரிய மனித புத்தகப்பட சின்னத்தை உருவாக்கி புதிய உலக சாதனை படைத்து, யூனிவர்சல் அச்சீவர்ஸ் புக்ஸ் ஆப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பெற்றனர்.
இதையும் படிங்க: "இந்துக் கோயிலை பராமரித்த இஸ்லாமிய வணிகக் குழு" - தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு கூறும் அரிய