ETV Bharat / state

மருத்துவர்கள் கவனக்குறைவால் இளம்பெண் உயிரிழப்பு? - தஞ்சாவூர் மாவட்ட செய்தி

தஞ்சாவூரில் மருத்துவர்கள் கவனக்குறைவு காரணமாக இளம்பெண் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

மருத்துவர்கள் கவனக்குறைவாக சிகிச்சை அளித்ததால் இளம்பெண் உயிரிழப்பு

author img

By

Published : Dec 31, 2022, 9:24 AM IST

தஞ்சாவூர்: மணக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி நீவிதா(23). இவர் இரண்டாவது குழந்தை மகப்பேறு அறுவை சிகிச்சைக்காக டிசம்பர் 24ஆம் தேதி பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் 26ஆம் தேதி காலை 10 மணிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகு தாயும் குழந்தையும் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அப்போது நீவிதாவுக்கு குளுகோஸ் ஏற்றப்பட்ட போது திடீரென வலிப்பும், அதனைத் தொடர்ந்து மூச்சுத்திணறலும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அருகில் மருத்துவர்கள், செவிலியர்கள் யாரும் இல்லை என்று உறவினர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அதன்பின் மருத்துவர்கள் நீவிதாவுக்கு தாமதமாக சிகிச்சை அளித்துள்ளனர். அவரது நிலைமை மோசமாகவே ஆக்சிஜன் பொருத்தி ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு நீவிதா சுயநினைவு இல்லாத நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், டிசம்பர் 28ஆம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாகவே நீவிதா இறந்ததாக உறவினர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது சகோதரர் நவீன்குமார் பேராவூரணி காவல் நிலையத்தில் மருத்துவர்கள் மீது புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட நீவிதாவின் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். முறையாக சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல நிபந்தனைகளை வலியுறுத்தி நீவிதாவின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

மருத்துவர்கள் கவனக்குறைவால் இளம்பெண் உயிரிழப்பு?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.