ETV Bharat / state

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி - உணவின்றி தவித்த பூம்பூம் மாட்டுக்காரர்களுக்கு கிடைத்த உதவி - பூம்பூம் மாட்டுக்காரர்களுக்கு உதவிய சமூக ஆர்வலர்கள்

தஞ்சாவூர்: ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த பூம்பூம் மாட்டுக்காரர்களுக்கு சமூக ஆர்வலர்கள் சிலர் அத்தியாவசிய பொருள்களை வழங்கியுள்ளனர்.

volunteers-helps-boom-boom-ox-fortune-tellers-suffered-without-foods-in-curfew-period

author img

By

Published : Apr 13, 2020, 2:14 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி பண்ணவயல் பகுதியில் வசித்துவரும் 70க்கும் மேற்பட்ட பூம்பூம் மாட்டுக்காரர்கள் ஊரடங்கு உத்தரவின் காரணமாக உணவின்றி தவித்துவருவதாக நமது ஈடிவி பாரத் செய்தி தளத்தில் நேற்று செய்தி பதிவிட்டிருந்தோம்.

இந்நிலையில், இதுகுறித்த தகவலறிந்த சமூக ஆர்வலர்கள், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிறுபான்மைப் பிரிவு பொருப்பாளர்கள் உள்ளிட்டோர் பூம்பூம் மாட்டுக்காரர்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று அவர்களுக்கு 15 நாட்களுக்குத் தேவையான 14 பொருள்கள் அடங்கிய அத்தியாவசிய பொருள்களையும், கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஏதுவாக முகக் கவசங்களையும் வழங்கினர்.

பூம்பூம் மாட்டுக்காரர்களுக்கு உதவிய சமூக ஆர்வலர்கள்

மேலும், எவ்வித உதவிகள் வேண்டுமானாலும் தங்களைத் தொடர்புகொள்ளுமாறும் தெரிவித்தனர். இதையடுத்து உதவிக்கரம் நீட்டியவர்களுக்கும் செய்தி வெளியிட்ட ஈடிவி பாரத் செய்தி தளத்திற்கும் பூம்பூம் மாட்டுக்காரர்கள் நன்றி தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் பூம்பூம் மாட்டுக்காரர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.