ETV Bharat / state

பாரம்பரிய விகடக்கலையை மீட்டெடுக்கும் தஞ்சையைச் சேர்ந்த 80 வயது முதியவர்! - குன்னியூர்

தஞ்சையைச் சேர்ந்த 80 வயது முதியவர், இந்த விகடக்கலையை கௌரவப்படுத்தினால் முன்னாள் விகடக் கலைஞர் தெனாலிராமனை கௌரவிப்பது போன்று இருக்கும் என தெரிவித்துள்ளார்.

VIKADA KALAI
விகடக்கலையை மீட்டெடுக்கும் தஞ்சையைச் சேர்ந்த முதியவர்
author img

By

Published : Jul 19, 2023, 4:51 PM IST

விகடக்கலையை மீட்டெடுக்கும் தஞ்சையைச் சேர்ந்த முதியவர்

தஞ்சாவூர்: விகடக்கலை என்பது மன்னர்கள் காலத்தில் இருந்த பாரம்பரிய கலையாகும். சிரிப்பையும், சிந்தனையையும் ஊட்டக்கூடிய வகையில் இக்கலை மிகவும் அரிதாக இருந்துள்ளது. ஆந்திரா மாநிலத்தில், விஜயநகரப் பேரரசின் கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் தெனாலி என்ற கிராமத்தில் பிறந்த தெனாலி ராமன் என்ற அரசவைக் கலைஞர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்துள்ளார்.

இவர் விகடக்கலையில் புகழ்பெற்றவர் ஆவார். இவர் மூலம் விகடக்கலை வளர்க்கப்பட்டது. தெனாலி ராமன் கதைகள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அலாதி பிரியம். இந்த நிலையில், கும்பகோணத்தை அடுத்த திருவிசநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி சாஸ்திரிகள் என்ற கலைஞர் விகடக்கலையைக் கற்று, பல ஆண்டுகளுக்கு முன்பு செய்து வந்துள்ளார். தற்போது அந்த கலை அழிந்துள்ளது.

இதனையடுத்து தஞ்சையைச் சேர்ந்த கலைமாமணி குன்னியூர் இரா.கல்யாணசுந்தரம் (80) என்பவர் இந்தக் கலையை மீட்டெடுக்கும் வகையில் கடந்த 60 ஆண்டுகளாக இந்தக் கலையை செய்து வருகிறார். தமிழ்நாட்டில் இவர் ஒருவர் மட்டுமே இந்த விகடக்கலையை இன்றும் சிரிப்பும், சிந்தனையுடனும், பள்ளி கல்லூரிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள், கோயில் விழாக்கள், அரசு நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் அமைப்புகள் மூலம் நடைபெறும் விழாக்களில் நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் மூலம் பல்வேறு தனியார் அமைப்புகள் வழியாக விருதுகளையும் பெற்றுள்ளார். நாகரிகம் மாற்றத்திற்கு ஏற்றார்போல் இந்த கலைக்குப் போதிய ஆதரவு இல்லாததாலும், விகடக்கலை மிமிக்ரி என்று மாறியதாலும் இக்கலை அழிந்து கொண்டு வருவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து விகடக்கலை கலைஞர் கல்யாணசுந்தரம் கூறும்போது, ''சிறுவயதில் விகடக்கலையைப் பற்றி தெரிந்து கொண்டு திருவிசநல்லூர் ராமசாமி சாஸ்திரிகளை மானசீக குருவாக ஏற்று, தற்போது இந்தக் கலையை பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கடந்த 60 ஆண்டுகளாக நிகழ்ச்சிகள் மூலம் கொண்டு சென்று வருகிறேன். போதிய வருமானம் இல்லாததால் இந்தக் கலை தற்போது நலிவடைந்துள்ளது.

மேலும், தமிழ்நாடு அரசு இயல், இசை, நாடக மன்றம் மூலம் கடந்த ஆட்சியில் விருது வழங்கியது. தமிழ்நாடு அரசு சார்பில் பொற்கிழி விருது பெறுவதற்கு முயற்சி செய்து வருகிறேன். மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

இந்தக் கலையை கௌரவப்படுத்தினால் முன்னாள் விகடக்கலைஞர் தெனாலி ராமனை கௌரவிப்பது போன்று இருக்கும். பழமையான இக்கலைக்கு ஆதரவு இல்லை. பொதுமக்களிடம் ஆர்வம் இல்லாததால் இந்தக் கலை வளர்ச்சி அடையவில்லை'' எனக் கூறினார்.

இவர் நிகழ்ச்சிகளில் பேசும்போது சமுதாயத்திற்கு சிந்தனை கருத்துகள் கூறுவது மட்டுமல்லாமல், தனது குரலில் மயில், கிளி, குயில், அணில், தவளை, எருமை மாடு, நாய், உள்பட பறவைகள், விலங்குகள் உள்பட ரயில், உடுக்கை சத்தம், மோட்டார் இன்ஜின், குழந்தை சத்தம் மற்றும் பல வகையான சிரிப்புகளையும் சிரித்து தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சிறப்பு விமான சுற்றுலா சேவையை அறிமுகப்படுத்திய IRCTC!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.