தஞ்சை தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் அதிமுக துணை ஒருங்கினைப்பாளர் வைத்திலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண் துறை அமைச்சர் துரைகண்ணு உள்ளிட்ட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், எல்லோருடைய கோரிக்கைகளை ஏற்று முதலமைச்சர் பழனிசாமி ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். ஆனால் தற்போது ஏன் அப்லோ மருத்துவமனை தடை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர் என்று தெரியவில்லை. இது குறித்து நீதிமன்றம் உரிய முடிவு எடுக்கும் என தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் அதிமுகவுக்கு நிகரான கட்சிகள் எதுவும் இல்லை, திமுக மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகள் சமமான கட்சிகள் இல்லை என்றார். அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விரக்தியின் விளிம்பில் இருக்கிறார், வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் டிடிவி தினகரன் காதில் பூ வைப்பார்கள் என்று தெரிவித்தார்.