கும்பகோணத்தை அடுத்த திருச்சேறை அருள்மிகு செந்நெறிச் செல்வனார் ஸ்ரீ ஞானவல்லி உடனுறை ஸ்ரீ சாரபரமேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய நாயன்மார்களால் போற்றிப் பாடப்பெற்ற மகத்துவங்கள் பல கொண்ட கோயிலாக இது விளங்குகிறது.
ஸ்ரீரிண விமோசனர் எனப்படும் அருள்மிகு கடன் நிவர்த்தீஸ்வரர் கத்தனை தெய்வமாக அருள் பாலிக்கிறார்.
இங்கு, ஆண்டுதோறும் மாசி மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் செந்நெறிச் செல்வனருக்கு மகோன்னதமான சூரிய பூஜை சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், இக்கோயிலில் எழுபது ஆண்டுக்குப் பிறகு வைகாசி விசாகத்தை முன்னிட்டு பத்து நாள் உற்சவம் நடைபெற்றுவருகிறது. அந்த வகையில், முதல் நாளான நேற்று, கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பத்தாம் நாள் தீர்த்தவாரி நடைபெறும். நிகழ்ச்சி ஏற்பாடுகளைத் திருக்கோயில் பணியாளர்கள், உபயதாரர்கள், கிராமவாசிகள் செய்திருந்தனர்.