சீனாவில் நடைபெற்ற சர்வதேச முப்படை வீரர்களுக்கான 7ஆவது தடகளப் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்ற கும்பகோணத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ராணுவ வீரர் ஆனந்தனுக்கு அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘அடுத்து நடைபெற உள்ள பாராலிம்பிக் போட்டிகளில் ராணுவ வீரர் ஆனந்தன் தங்கப் பதக்கங்களைப் பெற தமிழ்நாடு அரசு அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளும். அப்போது டெல்டா பகுதிகளில் நெல் சாகுபடிக்கு யூரியா தட்டுப்பாடு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, 33 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரம் தஞ்சை வந்துள்ளதாகவும், எனவே டெல்டா மாவட்டங்களில் யூரியா உள்ளிட்ட உரங்கள் தட்டுப்பாடு அறவே இல்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், வருங்காலத்திலும் விநியோகிக்கும் வகையில் யூரியா உரங்கள் கையிருப்பு உள்ளதாகவும், அதனை விற்பதற்கு கூட்டுறவு சங்கங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: யூரியா தட்டுப்பாட்டால் விவசாயிகளுக்கு இழப்பு: பி.ஆர். பாண்டியன்