தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அசூர் புறவழிச்சாலை அருகே முள்புதரில் இரண்டு வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடல் காயங்களுடன் துண்டு மீது வைக்கப்பட்டிருப்பதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் குழந்தையின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து குழந்தையைக் கொலை செய்துவிட்டு இப்படி போட்டுவிட்டு சென்றார்களா என்று பல்வேறு கோணத்தில் காவல் துறை ஆய்வாளர் கார்த்திகேயன் விசாரணை செய்துவருகிறார்.
இதையும் படிங்க...17 வயது சிறுமியை மணம் முடித்து பாலியல் வன்கொடுமை செய்தவர் மீது போக்சோ!