ஒரத்தநாடு பகுதியில் நேற்று நள்ளிரவு சிலர் கட்டைகளைக் கொண்டு தகராறில் ஈடுபட்டுவருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினரை கண்ட அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
அவர்களை பின்தொடர்ந்து சென்ற தலைமை காவலர் ராமநாதன், அருகேவுள்ள மர அறுவை மில் பக்கம் சென்று சோதனையிட்டுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த அடையாளம் தெரியாத நபர்கள் தலைமை காவலரை கட்டையால் தாக்கியுள்ளனர்.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த ராமநாதனை மீட்ட சக காவலர்கள், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கட்டையால் அடிபட்ட ராமநாதனுக்கு தலையில் எட்டு தையல்கள் போடப்பட்டுள்ளன. மேலும் இதுகுறித்து காவல் துறையின் விசாரணையில், தலைமை காவலரை தாக்கியது ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், மதியழகன் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செங்கமல கண்ணன் தலைமையிலான காவல் துறையினர் இரு நபர்களையும் வலைவீசி தேடிவருகின்றனர். நள்ளிரவில் தலைமை காவலரை கட்டையால் தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கோழிக்கறி சாப்பிட்டால் கொரோனா வரும்: வதந்தியை கிளப்பியவர் கைது!