ETV Bharat / state

அனுமதியின்றி மண் எடுத்த இருவர் கைது: வாகனங்கள் பறிமுதல்!

தஞ்சாவூர்: திருக்காட்டுப்பள்ளி அருகே அரசு அனுமதியின்றி சவுடு மண் எடுத்த வாகன ஓட்டுநர்கள் இருவரை கைதுசெய்த காவல் துறையினர், ஹிட்டாச்சி, இரண்டு டிராக்டர்களைப் பறிமுதல்செய்தனர்.

அனுமதியின்றி மண் எடுத்த இருவர் கைது
அனுமதியின்றி மண் எடுத்த இருவர் கைது
author img

By

Published : Feb 1, 2021, 11:26 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே வானராங்குடி கட்டாரி என்ற இடத்தில் ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் இரண்டு டிராக்டர்களில் சவுடு மண்ணை இருவர் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த திருக்காட்டுப்பள்ளி ஆய்வாளர் ஸ்ரீதேவி, உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் உள்ளிட காவல் துறையினர் மணல் அள்ளிக்கொண்டிருந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், எஸ்.கே. சேம்பர் உரிமையாளருக்கு விற்பனை செய்வதற்காக மணல் அள்ளிக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தனர். உடனடியாக ஹிட்டாச்சி இயந்திரம், டிராக்டர் ஆகியவற்றைப் பறிமுதல்செய்த காவல் துறையினர், சரவணன், விஜயகுமார் ஆகியோரை கைதுசெய்தனர்.

மேலும், இதற்கு உடந்தையாக இருந்த இளையராஜா, ராஜாங்கம், சேகர், கார்த்திகேயன், பாலகுமார், அஜித் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: மணல் அள்ளுவதில் தகராறு: ஒருவர் கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.