ETV Bharat / state

பட்டுக்கோட்டையில் காசநோய் தடுப்பு மருந்து விநியோகம் - தஞ்சாயில் காசநோய் தடுப்பு மருந்து வழங்கப்பட்டது

தஞ்சாவூர்: முதல்முறையாக பன்மருந்து தடுப்பு காசநோய் சிகிச்சை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டது. இதை காசநோய் தடுப்பு துணை இயக்குநர் வழங்கினார்.

tuberculosis
tuberculosis free treatment
author img

By

Published : May 20, 2020, 9:49 PM IST

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காசநோய் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு அம்மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காசநோய் தடுப்பு மருந்து வழங்கப்படுகிறது.

தற்போது கரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், நோயாளிகள் மருந்துகள் இன்றி பாதிக்கப்படக்கூடும் என்பதற்காக முதல்முறையாக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் காசநோய் பிரிவில் மாவட்ட காசநோய் தடுப்பு துணை இயக்குநர் முகம்மது கலீல் இங்குள்ள நோயாளிகளுக்கு பன்மருந்து தடுப்பு மருந்தை வழங்கினார்.

மேலும் காசநோய் பாதித்த நோயாளிகள் ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிட அவரவர் வங்கிக் கணக்கில் 500 ரூபாயையும் உழவர் அட்டை மூலம் ஆயிரம் ரூபாயையும் செலுத்தப்பட்டு வருகிறது.

காசநோய் பாதித்தவர்களுக்கு உரிய மருந்தை அவரவர் வீட்டுக்கே சென்று வழங்கப்படுகிறது. மருந்தை பெற முடியாதவர்கள் தொலைபேசியில் தகவல் தெரிவித்தால் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் வீட்டுக்கு கொண்டுவந்து கொடுக்க ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பை நோயாளிகள் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்று பட்டுக்கோட்டை தலைமை மருத்துவர் அன்பழகன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் டாக்டர் நியூட்டன் மற்றும் காசநோய் தடுப்பு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: பச்சை மண்டலமாக மாறும் தருமபுரி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.