தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணிப் பகுதியில் கஜா புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் மட்டுமல்லாமல் நிழல் தரும் 90% மரங்கள் வேரோடு சாய்ந்து போனது. இதையடுத்து எங்கு பார்த்தாலும் இயற்கை அழகுடன் ரம்மியமாக இருந்த பேராவூரணிப் பகுதி தற்போது மரம் செடி கொடி எதுவும் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதையடுத்து இந்த பகுதியில் உள்ள பலதரப்பட்ட இளைஞர்கள் மரக்கன்றுகளை நட்டு இயற்கை வளத்தை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பேராவூரணி நகர்ப்பகுதியில் இயங்கி வரும் கோக்கனட் சிட்டி, லயன்ஸ் சங்கம் அமைப்பினர் அரசு அலுவலகங்கள், சாலை ஓரங்கள் மற்றும் பள்ளி வளாகங்களில் கடந்த இரு மாதங்களாக இதுவரை 25 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு உள்ளனர்.
இது தவிர கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கன மழையினால் வீடுகளை இழந்து உண்ண உணவின்றி தவித்து வருபர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர். இது இப்பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிக்க:கோவை டவுன்ஹால் கடையில் தீ விபத்து!