ETV Bharat / state

'பாதுகாப்பாக எடுத்துச்செல்லப்படும் டிஎன்பிஎஸ்சி விடைத் தாள்கள்' - டிஎன்பிஎஸ்சி தேர்வுத் தாள்கள் பாதுகாப்பாக சென்னைக்கு எடுத்துச் செல்லப்படும்

தேர்வு முடிந்தவுடன் இன்று இரவுக்குள் அல்லது நாளை அதிகாலைக்குள் விடைத் தாள்கள் சென்னை கொண்டுவரப்படும். ஜிபிஎஸ், கேமரா கொண்டு பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படும் எனத் தேர்வாணைய தலைவர் பாலசந்திரன் தஞ்சையில் பேட்டியளித்துள்ளார்.

author img

By

Published : Jan 11, 2022, 6:18 PM IST

தஞ்சாவூர்: டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய தலைவர் பாலசந்திரன் தஞ்சையில் நடைபெற்றுவரும் புள்ளியியல் துறைக்கான காலிப் பணியிடங்களுக்கு நடைபெற்றுவரும் தேர்வினை ஆய்வுசெய்தார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், “தமிழ்நாடு முழுவதும் ஒன்பது மாவட்டங்களில் 79 தேர்வு மையங்களில் 32 ஆயிரத்து 323 பேர் ஒருங்கிணைந்த புள்ளியியல் துறை காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் தேர்வு நடைபெற்றுவருகிறது.

காலை மாலை என இரு பிரிவுகளாகத் தேர்வுகள் மாணவர்கள் நலன்கருதி நடத்தப்பட்டுவருகிறது. இன்று இரவோ அல்லது நாளை அதிகாலையோ அனைத்து விடைத்தாள்களும் சென்னை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

விடைத்தாள் வண்டியில் ஜிபிஆர்எஸ் கேமரா

விடைத் தாள்கள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் எடுத்துச்செல்ல விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாகனத்தில் எடுத்துச் செல்லும்போதும் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்ட வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வட்டார கல்வி அலுவலர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.