தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியாகும். இப்பகுதியில் அதிராம்பட்டினம் நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவராக இருந்த அப்துல் கரீம் தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் துரை. சந்திரசேகரன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தஞ்சை சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், அதிராம்பட்டினம் பேரூர் திமுக செயலாளர் இராம.குணசேகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமாகா, தலைவர் எடுக்கும் முடிவுகள் மீது நம்பிக்கை இல்லாத நிலையில் சிறுபான்மையினருக்காகக் குரல் கொடுக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்து திமுகவில் இணைந்ததாக புதிய நிர்வாகிகள் தெரிவித்தனர்.