ETV Bharat / state

தூக்குத் தேர் திருவிழா: வாணவேடிக்கையுடன் 18 கிராமங்களில் வலம் வந்த தேர்! - etvbharat tamil

ஒரத்தநாடு அருகே பின்னையூரில் தூக்குத் தேர் திருவிழா கும்மி கோலாட்டம் என வாண வேடிக்கையுடன் 18 கிராமங்களில் வலம் வந்து வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

temple festival
தூக்குத் தேர் திருவிழா
author img

By

Published : May 13, 2023, 12:40 PM IST

தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகில் உள்ள 18 கிராமங்களை உள்ளடக்கிய பின்னையூர் நாட்டில் அமைந்துள்ள அருள்மிகு திருத்தாண்டி அய்யனார், அருள்மிகு பிடாரி அம்மன், அருள்மிகு சூலப்பிடாரி அம்மன் ஆலயங்களின் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தூக்குத் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பக்தர்கள் தேரை தோளில் சுமந்து செல்வது இவ்விழாவின் சிறப்பு அம்சமாகும்.

பல ஆண்டுகளுக்கும் மேலாக நடைப்பெற்று வரும் இந்த விழாவில் பெண்கள் முளைப்பாரி எடுத்து, கோலாட்டம், கும்மி ஆடி முன் செல்ல தூக்குத் தேர் பின் தொடர்ந்து வந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரை சக்கரம் கொண்டு வட இழுத்துச் செல்லாமல் பக்தர்கள் தோளில் சுமந்து வந்து பல்வேறு இடங்களுக்கும் தேரைக் தூக்கிச் சென்றனர். எந்த இடத்தில் இருந்து தேர் புறப்பட்டதோ மீண்டும் அந்த தேர் நிலைக்கு வரும் வரை வேறு எந்த இடத்திலும் இறக்கி வைக்காமல் தோளில் சுமந்து வருவதால் இதை தூக்குத் தேர் என அழைக்கப்படுகிறது.

வழி நெடுக மக்கள் மாலை, தேங்காய், பழம் என அனைத்தையும் வைத்து சுவாமிகளுக்கு பூஜை செய்து வழிபட்டனர். தூக்குத் தேர் சுற்றியுள்ள 18 கிராமங்களுக்கும், சென்று 13 ஆம் தேதி மாலை தேர்நிலையை வந்தடையும். சாதி, மதம் பார்க்காமல் பொதுமக்கள் பகையை மறந்து ஒற்றுமையுடன் இருக்க இந்த விழா கொண்டாடப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: “முடிவில்லா வாரிசு அரசியல்”... கர்நாடகாவின் குடும்ப அரசியல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.