தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக அமலில் உள்ள ஊரடங்கை ஒட்டி அனைத்து கடைகளும் மூடப்பட்டு மளிகை, பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் மட்டும் நேர கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், பட்டுக்கோட்டை தாசில்தார் அருள் பிரகாசம் ஆகியோர் உத்தரவின் பேரில், அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேலு, துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், அதிராம்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜீவ் உள்ளிட்டோர் அதிராம்பட்டினம் நகர்ப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பொழுது கடைத்தெரு பகுதியில், 144 தடை உத்தரவு விதிமுறைகளை மீறி கணினி உதிரி பாகங்கள் விற்பனை, எலெக்ட்ரானிக்ஸ் சர்வீஸ் உள்ளிட்ட மூன்று கடைகள் திறக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த கடைகளை அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனா். மேலும், விதிகளை மீறி செயல்படும் மளிகைக் கடைகள், பெட்டிக்கடைகள் உள்பட 10க்கும் மேற்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பேரூராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும், பட்டுக்கோட்டை தாசில்தார் அருள் பிரகாசம் அதிராம்பட்டினம் பகுதியில் முகாமிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
இதையும் படிங்க: கரோனாவை கண்டறிய ‘4000 ரேபிட் கிட்’ - புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர்