தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோயில் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட தாலுகா காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்த உள்ளனர். இதையடுத்து அங்கு சந்தேகப்படும்படி மூன்று நபர்கள் இருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், மூவரும் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (34), சோலைராஜா (36), சிங்கப் பெருமாள் குளம் பகுதியைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (21) என்பது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் அவர்கள் கஞ்சா விற்பனை செய்ததாகத் தெரிவித்தனர். இதனையடுத்து காவல் துறையினர் அவர்கள் மூவரையும் கைதுசெய்தது மட்டுமின்றி, 200 கிராம் கஞ்சாவைப் பறிமுதல்செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.