தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் பகுதியில் உரிமம் பெறாத கள்ளத் துப்பாக்கிகளைச் சிலர் வைத்திருப்பதாகக் காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள வீடுகளில் காவல் துறையினர் சோதனைசெய்தனர். அப்போது அங்கிருந்த மருத்துவர் ராம்குமார், அவரது நண்பர்கள் சக்திவேல், அரவிந்த் ஆகியோர் சட்டவிரோதமாக உரிமம் பெறாத கள்ளத் துப்பாக்கிகள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கள்ளத் துப்பாக்கிகளைப் பறிமுதல்செய்த காவல் துறையினர் மூவரையும் கைதுசெய்து காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர். பிறகு நீதிமன்றக் குடியிருப்பில் உள்ள நீதிபதி இல்லத்தில் மூவரையும் முன்னிலைப்படுத்தினர்.
மூவரையும் 15 நாள்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு மூவரும் சிறையில் அடைக்கக் கொண்டுசெல்லப்பட்டனர்.
இதையும் படிங்க... சட்டவிரோதமாக பதுக்கிவைத்திருந்த தூப்பாக்கிகள் - ஒருவர் கைது!