ETV Bharat / state

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தஞ்சை கருணாசாமி கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா! - வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில்

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தஞ்சை கருணாசாமி கோயில் வைகாசி விசாகப் பெருவிழாவில், ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது.

ஆயிரமாண்டு பழமை வாய்ந்த தஞ்சை கருணாசாமி கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா!

author img

By

Published : May 29, 2023, 12:45 PM IST

ஆயிரமாண்டு பழமை வாய்ந்த தஞ்சை கருணாசாமி கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா!

தஞ்சாவூர்: தஞ்சாவூரை அடுத்த கரந்தையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புகழ்பெற்ற கருணாசாமி கோயில்‌ என்று அழைக்கப்படும் வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு வசிஷ்டர் பூஜை செய்து வழிபட்டதால் இந்த கோயில் வசிஷ்டேஸ்வரர் கோயில் எனப் பக்தர்களால் அழைக்கப்படுகிறது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சார்ந்த 88 திருக்கோயில்களில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது.

இங்குள்ள தெய்வங்கள் வசிஷ்டேஸ்வரர் என்றும், கருணாசாமி என்றும், இறைவி பெரியநாயகி என்றும், திரிபுரசுந்தரி என்றும் அழைக்கப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இக்கோயில், தஞ்சை பெரிய கோயில் கட்டப்படுவதற்கு முன்பே கட்டப்பட்டுள்ளது. மேலும், இக்கோயிலில் இராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழன் திருப்பணிகள் செய்து இருக்கிறார்.இக்கோயில், தேவாரப்பாடல் பெற்ற வைப்புத் தலமாகவும் விளங்குகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா கடந்த 20-ஆம் தேதி அருந்ததி வசிஷ்டர் திருக்கல்யாணத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, தினந்தோறும் நிகழ்ச்சிகளாக விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கொடியேற்றம், படிச்சட்டத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, ஸ்ரீ சூரிய பிரபை வாகனம், ஸ்ரீ சந்திர பிரபை வாகனம் மற்றும் ஸ்ரீ பூத வாகனம் ஆகியவற்றில் தினமும் சுவாமிக்குப் பூஜைகள் செய்து வீதி உலா நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நேற்று இரவு (மே 28) சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீவிநாயகர் மூஷிக வாகனத்திலும், முருகப்பெருமான் வள்ளி தேவசேனா சமேததராய் மயில் வாகனத்திலும், சோமாஸ்கந்தர், பெரியநாயகி அம்மன் பெரிய விருட்சப வாகனத்திலும் மற்றும் பெரிய நாயகி அம்பிகை தனியாக சிறிய விருட்சப வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் பல்லக்குகளில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

இதனையடுத்து, சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க மகாதீபாரதனை காட்டப்பட்டது. பின்னர் மேளதாளங்கள் முழங்க, சுவாமியை பல்லக்குகளில் வைத்து பக்தர்கள் தோளில் சுமந்து கோயிலில் பிரகாரம் வலம் வந்ததைத் தொடர்ந்து வீதி உலா நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பதினைந்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் யானை வாகனம், ஸ்ரீ கைலாச வாகனம், குதிரை வாகனம், திருத்தேர், வைகாச தீர்த்தவாரி, பந்தல் காட்சி, கொடி இறக்கம், பிச்சாண்டவர் மற்றும் முக்கிய விழா நிகழ்வாக சப்தஸ்தான பல்லக்கு புறப்பாடு, சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி ஆகியவை தொடர்ந்து நடைபெற உள்ளது.

இதனால் கோயில் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா உள்ளிட்ட கோயில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து, கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பண்பாடு மிக்க பாரத பிரதமரை நாம் பெற்று உள்ளோம்: தருமபுர ஆதீனம் புகழாரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.