திருவள்ளுவர் சிலை அவமதிப்பு வழக்கு குறித்து ஐஜி வரதராஜு செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில் அவர்," தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதை குறித்து அப்பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது குறித்து விசாரிப்பதற்கு டிஎஸ்பி சீதாராமன் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி ஒன்று கிடைத்துள்ளது. அதில் அடையாளம் தெரியாத நபர் இரவு 11 மணியளவில் வருவது தெரியவந்துள்ளது. அவரை கண்டுபிடிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்குக் காரணமானவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
தற்போது திருவள்ளுவர் சிலைகள் உள்ள இடங்களில் காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார். இச்சந்திப்பில் தஞ்சை சரக டிஐஜி லோகநாதன், எஸ்.பி. மகேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க : இத்தனை நாள்களாக தலைவர்கள் சிலை... இன்று திருவள்ளுவர் சிலைக்கே இப்படியா!