தஞ்சாவூர் மாவட்டம் கீழ புனவாசல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (32), சக்குபாய் (70), பிரகாஷ் என்பவரது மகன்கள் அகிலேஷ் (12), பரணீஸ் (10) ஆகிய 4 பேர் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றனர்.
அப்போது அரசூர் அருகே சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை ஏற்றிக் கொண்டு சென்ற டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் மணிகண்டன், சக்குபாய், அகிலேஷ் ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பரணீஸ் காயத்துடன் உயிர் தப்பினார்.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த திருவையாறு டிஎஸ்பி சித்திரவேல் தலைமையிலான காவல் துறையினர், சடலங்களை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரணீஸை திருவையாறு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: டெம்போ மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!