ETV Bharat / state

திருவையாறில் 174ஆவது தியாகராஜ ஆராதனை விழா தொடக்கம்! - திருவையாறு தியாகராஜ ஆராதனை

தஞ்சை: திருவையாறில் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 174ஆம் ஆண்டு ஆராதனை விழா தொடங்கியது.

தியாகராஜ ஆராதனை
தியாகராஜ ஆராதனை
author img

By

Published : Feb 2, 2021, 9:28 AM IST

திருவையாறில் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 174ஆம் ஆண்டு ஆராதனை விழா மாலை தொடங்கியது.

திருவையாறில் 174ஆவது தியாகராஜ ஆராதனை விழா தொடக்கம்
ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபா சார்பில் தியாகராஜசுவாமிகளின் சன்னதி அருகே தொடக்க விழா நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக மாவட்ட ஆட்சியர் ம. கோவிந்தராவ், சபா தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கிவைத்தனர்.
முன்னதாக சபா செயலாளர் அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல் வரவேற்றார். இறுதியாக சபா செயலாளர் ராஜாராவ் நன்றி தெரிவித்தார். விழாவில் மாவட்ட ஆட்சியர் ம. கோவிந்தராவ் பேசியதாவது:

உலகப்புகழ் பெற்ற இவ்விழாவால் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு பெருமை. கரோனா தொற்று காலத்தில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலோடு இந்த விழாவை நிச்சயம் நடத்த வேண்டும் என்ற குறிக்கோளோடு தற்போது நடத்தப்படுகிறது. அதற்காக இந்த சபாவினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் சிறப்பாக எடுத்துள்ளனர்.

திருவையாறு என்பது ஐந்து ஆறுகள் பாயும் ஒரு புண்ணிய இடமாகும். இப்படி சிறப்புவாய்ந்த இடத்தில் அமைந்துள்ள இந்த தியாகராஜசுவாமிகளின் ஆராதனை விழா நடப்பது பெருமை. இவ்விழாவையும், இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சிகளையும் உலகம் முழுவதும் உற்றுநோக்குகின்றனர். ஆண்டுதோறும் இவ்விழாவை சிறப்பாகவும், தனித்துவத்துடனும் சபாவினர் நடத்திவருகின்றனர்.

விழாவில் சபாவின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே. வாசன் பேசியதாவது:

தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா கரோனா காலத்திலும் தடைபடாமல் நடைபெற வேண்டும். அதற்குண்டான சரியான கோட்பாடுகளையும், வழிகாட்டுதலையும் மாவட்ட நிர்வாகம் வழங்கியதால், இவ்விழா தியாகராஜசுவாமிகளின் அருளால் சிறப்பாகத் தொடங்கியுள்ளது.

நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான இசைக்கலைஞர்கள் வந்திருந்து, ஒன்றுசேர பஞ்ச ரத்தன கீர்த்தனைகளை பாடியும் இசைத்தும் தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்த இருக்கிறார்கள். வழக்கமான 5 நாள்கள் நடைபெறும் இவ்விழா, கரோனா பரவாமல் இருக்க வேண்டும் என்பதால் இவ்வாண்டு 2 நாள்கள் நடைபெறுகின்றன. இவ்விழா மிகவும் தனித்துவமானது.

கர்நாடக சங்கீத உலகில் தனக்கென தனி இடத்தைப் பெற்றவர்தான் சுவாமிகள். ஆராதனை விழாவை தஞ்சை மண் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள இசைக் கலைஞர்களும், ரசிகர்களும் ஒன்றுசேர்ந்து ஒவ்வொரு வருடமும் பெருமை சேர்த்துவருகின்றனர்.

இப்படி ஒன்றுசேர்ந்து இசையஞ்சலி செலுத்துவது தியாகராஜசுவாமிகளுக்குச் செய்யும் மிகப்பெரிய அஞ்சலியாகும். சங்கீதத்தை ஊக்கவிக்கக்கூடியவிதமாக இந்த நிகழ்வு நடைபெற்றுவருகிறது. கரோனா காலத்தில் கடந்த 10 மாதங்களாக நடைபெறாமல் இருந்த இதுபோன்ற இசை நிகழ்ச்சிகள், இனி நடத்துவதற்கு இந்த ஆராதனை விழா அடித்தளம் அமையும் என நான் நம்புகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையடுத்து இன்று (பிப். 02) தியாகராஜ சுவாமி சமாதியில் பஞ்சரத்ன கீர்த்தனை இசையஞ்சலி விழா தற்போது தொடங்கி நடைபெற்றுவருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.