தஞ்சை மாவட்டத்தில் உள்ள பூண்டி மாதா பேராலயம் பிரசித்திப்பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாகும். இங்கு ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு நேற்று நள்ளிரவு 11.30 மணி அளவில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி தொடங்கியது.
பேராலய அதிபரும், பங்கு தந்தையுமான பாக்கியசாமி தலைமையில் நடைபெற்ற இந்தச் சிறப்பு திருப்பலியில் துணை அதிபர் அல்போன்ஸ், ஆன்மிகத் தந்தை அருளானந்தம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்தச் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியில் பங்குகொண்டவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர். இதேபோல் இன்று காலை தொடங்கி மாலை வரை சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.
இதில் பொதுமக்கள் கலந்துகொள்ள குடந்தை போக்குவரத்து கழகத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதையும் படிங்க : வன விலங்குகளை விரட்ட புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு...!