ETV Bharat / state

மணல் திருடவந்த லாரிகளைச் சிறைப்பிடித்த பொதுமக்கள்!

தஞ்சாவூர்: அரசு அனுமதியின்றி கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளவந்த நான்கு லாரிகளைப் பொதுமக்கள் இரவு 11 மணிக்குப் பிடித்துவைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மணல் திருட வந்த லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள்!

author img

By

Published : Jun 8, 2020, 1:27 PM IST

தஞ்சாவூரில் காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆற்றில் மணல் அள்ளுவதை நீதிமன்றம் தடைசெய்துள்ளது. ஆனால் இரவு நேரத்தில் கல்லணை அருகே கொள்ளிடம் ஆற்றில் சுக்காம் பார், கோவிலடி பகுதியில் மணல் கொள்ளை அரங்கேறிவந்தது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 11 மணியளவில் மணல் அள்ளுவதற்காக நான்கு லாரிகள் அப்பகுதிக்குள் நுழைந்தன. அவற்றை சுக்காம்பார், கோவிலடி பொதுமக்கள் சிறைப்பிடித்துவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மணல் திருடவந்த லாரிகளைச் சிறைப்பிடித்த பொதுமக்கள்!

சம்பவ இடத்திற்கு அலுவலர்கள் யாரும் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து சுமார் ஒன்றரை மணிநேரம் பொதுமக்கள் அப்பகுதியிலேயே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியினரே மணல் கொள்ளையில் ஈடுபட முயன்றவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பிவைத்தனர்.

அதன்பிறகு சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் சிவக்குமார் பொதுமக்களைப் பாரட்டியதுடன், சரியான நேரத்தில் வரமுடியாததற்கு வருத்தம் தெரிவித்தார். மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: சட்டவிரோத தத்தெடுப்பு... காவல் துறை நடவடிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.