ETV Bharat / state

'40 தொகுதிகளிலும் இரட்டை இலையில் போட்டியிட சக்தியில்லை' - கே.பி.முனுசாமி - எங்களுக்கு சக்தி

தஞ்சை: "ஜெயலலிதா அளவிற்கு 40 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அளவிற்கு எங்களுக்கு சக்தி கிடையாது" என்று அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார்.

கே.பி.முனுசாமி
author img

By

Published : Feb 17, 2019, 7:32 PM IST

KPM
கே.பி.முனுசாமி
தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக. சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு 126 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.
undefined

பின்னர் செய்தியாளர்களிடம் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி கூறியதாவது, "ரஜினிகாந்த் ஊடகங்களுக்கு தான் பேட்டியளிக்கிறார். முதலில் அவர் மக்களை சந்திக்கட்டும். நாங்கள் மக்களோடு இருக்கிறோம். அதனால் அவரை பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

எதிரிகள் எப்போதும் இருப்பார்கள். துரோகிகள் இந்த தேர்தலோடு முடிவுக்கு வந்துவிடுவார்கள். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கழக நிர்வாகிகளோடு ஆலோசித்து முடிவெடுக்கும். ஜெயலலிதா அளவிற்கு 40 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அளவிற்கு எங்களுக்கு சக்தி கிடையாது.

பாஜகவை தமிழகத்திற்கு அடையாளம் காட்டியவர் ஜெயலலிதா. அவரின் செல்வாக்கால் தான் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்று காங்கிரசுக்கு எதிராக ஆட்சி அமைக்க முடிந்தது. ஸ்டாலினை மக்கள் கேள்வி கேட்டதால், தனது கட்சி தொண்டர்களை கிராமசபை கூட்டங்களுக்கு அனுப்புகிறார், என்று விமர்சித்தார்.

தஞ்சையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி பேட்டி.

ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது பல தொண்டர்கள் அவரது பெயர்களில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக விருப்ப மனு கட்டினார்கள் தற்போது அவர் இல்லாததால் அதன் எண்ணிக்கை குறைந்துள்ளது. ரஜினிகாந்த் முதலில் மக்களை வந்து சிந்திக்கட்டும் ஊடகங்களுக்கு தான் அவர் பேட்டி அளிக்கிறார் நாங்கள் மக்களுடன் இருப்பவர்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் துரோகி முடிவு கட்டப்படும் எதிரி என்பவர்கள் எப்பொழுதும் இருப்பவர்கள் அவர் எப்போதும் எதிரிகளாக இருப்பார்கள். கூட்டணி குறித்து தலைமை கழகம் முடிவு எடுக்கும். 40 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் இரட்டை இலையை வழங்கப்படுமா என கேட்டதற்கு ஜெயலலிதா மிகப்பெரிய சக்தி நாங்கள் அவருடைய தொண்டர்கள் நாங்கள் அவர் அளவிற்கு எங்களுக்கு சக்தி கிடையாது. பாஜகவை தமிழகத்திற்கு அடையாளம் காட்டியவர் ஜெயலலிதா ஜெயலலிதாவின் செல்வாக்கால் தான் நாடாளுமன்றத் தேர்தலில் அப்பொழுது மிகப்பெரிய வெற்றி பெற்று காங்கிரசுக்கு எதிராக ஆட்சி அமைக்க முடிந்தது. நாங்கள் எந்த கட்சியை பற்றியும் கவலைப்பட மாட்டோம் யாருக்கும் அஞ்ச மாட்டோம். ஸ்டாலின் கிராமசபை கூட்டத்தில் ஆரம்பத்தில் மக்களை அழைத்து உட்கார வைத்தவர் மக்கள் கேள்வி கேட்பதால் தற்போது கட்சி தொண்டர்களை மட்டுமே அமர வைக்கிறார்.

Visual through reporter app file name : TN TNJ 01A FEB 17 ADMK KP MUNUSAMYE BYET 7204324
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.